தேசிய செய்திகள்

2 சிறுமிகள் கடத்தல் வழக்கு: நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு + "||" + 2 girls kidnapping case: Nithyananda's 2 female disciples denied bail

2 சிறுமிகள் கடத்தல் வழக்கு: நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு

2 சிறுமிகள் கடத்தல் வழக்கு: நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு
2 சிறுமிகள் கடத்தல் வழக்கில், நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
ஆமதாபாத்,

தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்யானந்தாவின் ஆசிரம கிளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ளது. இங்கு முன்னாள் சீடர் ஜனார்த்தன் சர்மா என்பவரின் 2 பெண் குழந்தைகளை கடத்திவைத்து, கொடுமைப்படுத்துவதாக புகார் செய்யப்பட்டது. ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளூர் ஆசிரம பொறுப்பாளர் பிரன்பிரியா, அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகிய 2 பெண் சீடர்களை கடந்த மாதம் 20-ந் தேதி கைது செய்தனர்.


அவர்களது இடைக்கால ஜாமீன் மனு ஏற்கனவே 27-ந் தேதி உள்ளூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2 பேரும் மிக தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது
குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தள்ளப்பட்டது.
2. கைலாசா என்பது ஒரு இடமில்லை ; கடவுள் நிறைந்திருக்கும் அண்ட சராசரம் - நித்யானந்தா விளக்கம்
கைலாசா நாடு தொடர்பான பேச்சு பரபரப்பாக இருக்கும் நிலையில் அதுபற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார் நித்யானந்தா... கைலாசா என்பது ஒரு இடமில்லை என்றும் அது இறைவனை நம்பும் அண்ட சராசரம் என்றும் தெரிவித்துள்ளார்.