தேசிய செய்திகள்

சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில் + "||" + 4 Men Sentenced To 30 Years For Raping Teen In Chhattisgarh

சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்

சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்
ஆபாசமாக படமெடுத்து மிரட்டி, சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டது.
பிலாஸ்பூர்,

சத்தீஸ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தோர்வாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த 2015-ம் ஆண்டு சிலர் ஆபாசமாக படமெடுத்தனர். பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டியே அவரை தொடர்ந்து கற்பழித்து வந்தனர். இது குறித்து அந்த சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.


இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மாவட்ட 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் குமார் தமக், குற்றவாளிகள் 4 பேருக்கும் 30 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மற்றொருவருக்கு ரூ.21 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பண்ருட்டி அருகே பரிதாபம் செங்கல் சூளை குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி
பண்ருட்டி அருகே செங்கல்சூளை குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...