ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு: தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்கிறது


ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு: தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்கிறது
x
தினத்தந்தி 16 Dec 2019 5:12 AM GMT (Updated: 16 Dec 2019 9:28 PM GMT)

ரேப் இன் இந்தியா என ராகுல் காந்தி பேசியது தொடர்பாக, தேர்தல் கமிஷன் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசார கூட்டத்தில் சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். இதில் அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தேர்தல் கமிஷனில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story