அசாமில் வன்முறை ; ரூ.1000 கோடி இழப்பு என அரசு தகவல்


அசாமில்  வன்முறை ; ரூ.1000 கோடி இழப்பு என அரசு தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2019 1:47 PM GMT (Updated: 31 Dec 2019 1:47 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதால், ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணித்திருப்பதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

கவுகாத்தி, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாம் மாநிலத்தில்தான் முதலில் போராட்டம் வெடித்தது. பஸ் எரிப்பு, ரெயில் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்களும் நடந்தன.

அசாம் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் ஜெயந்தா மல்லா பருவா இன்று கவுகாத்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “  குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வன்முறை போராட்டங்களால், சுற்றுலா துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வரவில்லை. அசாமுக்கு செல்ல வேண்டாம் என்று வெளிநாடுகள் அறிவுறுத்தியதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வரவில்லை.

எனவே, டிசம்பர், ஜனவரி ஆகிய 2 மாதங்களிலும் தலா ரூ.500 கோடி வீதம் மொத்தம் ரூ.1,000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளோம்” என்றார். 

Next Story