பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் -தேர்தல் ஆணையம்


பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் -தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 6 Jan 2020 10:33 AM GMT (Updated: 6 Jan 2020 10:33 AM GMT)

பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி

70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே, அதற்குள்ளாக தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

டெல்லி  சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

ஜனவரி 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் 
ஜனவரி 21-ந்தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு
ஜனவரி 22 ந்தேதி வேட்பு மனு பரிசீலனை
ஜனவரி 24 ந்தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்
பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல்
பிப்ரவரி 11 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

என கூறினார்.

Next Story