3-வது மாடியில் இருந்து செல்போன் பேசிய மாணவர் தவறி விழுந்து சாவு


3-வது மாடியில் இருந்து செல்போன் பேசிய மாணவர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 12 Jan 2020 2:05 AM IST (Updated: 12 Jan 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

3-வது மாடியில் இருந்து செல்போன் பேசிய மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஜபால்பூர்,

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் கேஷரி (வயது 22) என்ற மாணவர் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் இரவு 8 மணி அளவில் விடுதி 3-வது மாடியில் நின்று கொண்டு செல்போனில் தன்னுடைய பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனே மற்ற மாணவர்கள் உதவியுடன் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சச்சின் கேஷரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடக்கும் போது சச்சின் கேஷரி தன்னுடைய பெற்றோரிடம் தேர்வில் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண்தான் வாங்குவேன் என்று போனில் கூறியதாக மாணவர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் சம்பவ இடத்தை ஆய்வு நடத்திய தடயவியல் நிபுணர்கள் கூறுகையில், மாணவர் மாடியில் இருந்து கால் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்றனர்.

Next Story