தேசிய செய்திகள்

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது- இந்திய ராணுவ தளபதி + "||" + Abrogation of Article 370 disrupted proxy war: Army chief Gen MM Narvane

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது- இந்திய ராணுவ தளபதி

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது- இந்திய ராணுவ தளபதி
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறினார்
புதுடெல்லி

இன்று 72-வது இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.   டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் ராணுவ தின கொண்டாட்டங்கள் களை கட்டின.

ராணுவத்தினரின் வண்ணமிகு அணிவகுப்புகள் கண்ணைக் கவர்ந்தன. முழுவதும் ஆண் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்புக்கு கேப்டன் தானியா ஷேர் கில் என்ற பெண் ராணுவ அதிகாரி தலைமயேற்று நடத்தினார்.

ராணுவ தினத்தையொட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.

பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது;-

 ஜம்மு-காஷ்மீரில்  370 வது  சட்ட பிரிவை ரத்து செய்வதற்கானமத்திய அரசின்  முடிவு, ஒரு 'வரலாற்று நடவடிக்கை' இது 'மேற்கு அண்டை நாடுகளின்' பினாமி போரை சீர்குலைத்துள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு பல வழிகள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம்.  இந்திய இராணுவம் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, உலகளாவிய முன்னேற்றங்களில்  ஒரு கண் வைத்திருக்கிறது. 

'தொழில்நுட்ப நீதியாகவும் ' மற்றும் 'சுதேசமயமாக்கல்' தொடர்பாகவும்  இந்திய ராணுவம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கள் அடிப்படை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தவும், நம்மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படவும்  எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம். என கூறினார்.

முன்னதாக  இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படைத் தளபதி கராம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
2. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: காஷ்மீரில் செல்போன் சேவை முற்றிலும் சீரடைந்தது
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து காஷ்மீரில் செல்போன் சேவை முழுவதும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 2 மாவட்டங்களில் இணையதள வசதியும் கொடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. பயங்கரவாதிகளுக்கு உதவிய டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதியாகவே விசாரணை நடத்தப்படும் -ஜம்மு காஷ்மீர் போலீஸ்
பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைதான டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதிகளுக்கு இணையான முறையிலேயே விசாரணை நடத்தப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் அறிவித்து உள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள் ; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
5. பன்னாட்டு தூதர்களை சந்தித்த விவகாரம் ; நிர்வாகிகள் 2 பேருக்கு காங்.விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பன்னாட்டு தூதர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரண்டு பேருக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.