தேசிய செய்திகள்

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு + "||" + BJP talks about those who are fighting the citizenship law in Delhi. MP Controversy Talk

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷகீன் பாக் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் பெண்கள், மாணவிகள், சிறார்கள், முதியோர் என அனைத்து தரப்பு வயதினரும் பங்கேற்று வருகின்றனர். இது, வருகிற 8-ந் தேதி டெல்லி மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.


இப்போராட்டம் தொடர்பாக டெல்லி மேற்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பல லட்சக்கணக்கான மக்கள் அங்கே (ஷகீன் பாக்) கூடியிருக்கிறார்கள். இதுபற்றி டெல்லி நகரவாசிகள் நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த போராட்டக்காரர்கள், உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து சகோதரிகளையும், மகள்களையும் கற்பழித்து கொன்று விடுவார்கள்” என்றார்.

அவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷகீன் பாக் பகுதியில் ஒருவரைக் கூட உங்களால் பார்க்க முடியாது. அனைவரையும் விரட்டியடிப்போம்” என்று போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பர்வேஷ் வர்மாவின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர்
டெல்லியில் 6 மாடி கட்டிடம் லேசாக சாய்ந்தது இதனால் குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினார்கள்.
2. டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்
டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது.
4. டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி, பா.ஜ.க. அரசுக்கு பாடம் - காதர் முகைதீன் பேட்டி
‘டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி என்பது, பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது’ என்று காதர் முகைதீன் கூறினார்.
5. ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.