காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீசார்


காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீசார்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:35 AM GMT (Updated: 30 Jan 2020 10:35 AM GMT)

ஆந்திர மாநிலத்தில் காதலித்த வாலிபர் ஏமாற்றி விட்டார் என புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குண்டூர்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அருந்தல்பேட்டை சாரதா நகரைச் சேர்ந்த இளம் பெண்  டேவிட் ராஜ் வாலிபரை காதலித்து வந்தார்.  ஆனால் ஆனால் டேவிட்  அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் . இதை தொடர்ந்து  இளம்பெண்  தன்னை ஓராண்டாக காதலித்த டேவிட் ராஜ் தற்போது திருமணத்திற்கு மறுக்கிறார் என்று  அருந்தல்பேட்டை  போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் புகார் கொடுத்தார்.

இளம்பெண் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் எஸ்.ஐ பாலகிருஷ்ணா வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் தினமும் அவருடைய வீட்டிற்கு சென்ற எஸ்.ஐ பாலகிருஷ்ணா, நேற்று முன்தினம் இளம் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத போது அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அவருடன் சென்றிருந்த ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய 2 போலீசாரும் தங்களுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணை வற்புறுத்தினர். இதை மறுத்த இளம்பெண் விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு வந்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி தொலைபேசி மூலம் மாவட்ட எஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த தகவல் அடிப்படையில் குண்டூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எஸ்.ஐ பாலகிருஷ்ணா, அவருடன் சென்ற ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய இரண்டு போலீசார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ பாலகிருஷ்ணா, ராமு, ஹனுமந்த ராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த நிலையில் போலீஸ் தரப்பில் கூறும் போது,

இளம் பெண் ஏற்கனவே  அருந்தல்பேட்டை மற்றும் பெடகாணி காவல் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில்  மூன்று நபர்கள் மீது மூன்று புகார்கள் அளித்து உள்ளார்.  ரேவந்த் என்பவர் மீது தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக  பெடககனி போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தார். இதை தொடர்ந்து இளம் பெண்ணை ரேவந்த்  திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவரை விட்டு பிரிந்தார் இளம் பெண். 

ராம ராவ் என்பவர் தன்னை  ஏமாற்றியதாகக் கூறி மற்றொரு புகாரை  அருந்தல்பேட்டை காவல் நிலையத்தில்  கொடுத்து உள்ளார்.

மேலும், இந்த இளம் பெண் மற்றொரு புகார் அளித்த போது  எஸ்சி / எஸ்டி அட்டூழியம் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர் மீது எதிர் வழக்குத் தாக்கல் செய்வதாக டேவிட் ராஜு மிரட்டினார். இதை தொடர்ந்து பயந்துபோன இளம் பெண்  போலீசாரின் உதவியை நாடி உள்ளதாக   கூறப்படுகிறது.

Next Story