ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்


ஜாமியா துப்பாக்கிச் சூடு: கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு  டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jan 2020 2:28 PM GMT (Updated: 30 Jan 2020 2:28 PM GMT)

ஜாமியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் நடுவே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரைச் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; - “ டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து டெல்லி காவல் ஆணையரிடம் பேசினேன்.  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களை மத்திய அரசு சகித்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

Next Story