மத்திய பட்ஜெட் சிறப்பானது என மக்கள் உணர்ந்துள்ளனர் ; பிரதமர் மோடி


மத்திய பட்ஜெட் சிறப்பானது  என மக்கள் உணர்ந்துள்ளனர்  ; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 Feb 2020 7:42 AM GMT (Updated: 4 Feb 2020 10:00 AM GMT)

மத்திய பட்ஜெட் சிறப்பானது என மக்கள் உணர்ந்துள்ளனர் என்று பாஜக பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் பற்றி மக்களை தவறாக  வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும்  பட்ஜெட் சிறப்பானது என்று மக்கள் தற்போது உணர்ந்து இருப்பதாகவும் பிரதமர் மோடி பாஜக பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பேசினார். 

பாஜக பாராளுமன்றக்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “  போடோ  அமைப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும்  புரு-ரீங் பழங்குடியின உறுப்பினர்களுடனான ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி எனக்குறிப்பிட்டார். மேலும், பல தசாப்தங்களாக வன்முறை மற்றும் இரத்த கறைகளை எதிர்கொண்ட  வடகிழக்கில்,  சமாதான சகாப்தத்தை உருவாக்கும். என்றார். 

மத்திய பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி,  பட்ஜெட் குறித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தற்போதைய  உலகளாவிய பொருளாதார சூழலில், மத்திய பட்ஜெட் மிகச்சிறப்பானது என்று மக்கள் உணர்ந்துகொண்டனர்” என்றார்.  

பாஜக பாராளுமன்றக்குழு கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா , “ வரும் 8 ஆம் தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்ற தேர்தலில்  பாஜக சிறப்பான வெற்றியை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story