தேசிய செய்திகள்

சர்ச்சை கருத்துகளை கூற வேண்டாம் ; கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே அறிவுரை + "||" + Coalition leaders not to make controversial comments uddhav thackrey advise

சர்ச்சை கருத்துகளை கூற வேண்டாம் ; கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே அறிவுரை

சர்ச்சை கருத்துகளை கூற வேண்டாம் ; கூட்டணி  கட்சி தலைவர்களுக்கு  உத்தவ் தாக்கரே அறிவுரை
கூட்டணி கட்சி தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் கொள்கை ரீதியில் முரண்பாடான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி ஆட்சி நடத்தி வருகின்றன. எனினும் ஆட்சி அமைந்த நாள் முதல், 3 கட்சி தலைவர்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பத்திரிகை ஒன்றில் வீர சாவர்க்கர் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்துத்துவா கொள்கையை கொண்ட சிவசேனா வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கட்டுரை கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் உள்ள 3 கட்சி தலைவர்களையும் வர்ஷா பங்களாவில் சந்தித்து பேசினார். அப்போது அவர், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மந்திரி ஒருவர் கூறுகையில், “சர்ச்சையை ஏற்படுத்தும் தேவையில்லாத கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் என முதல்-மந்திரி கூறினார். இதேபோல கட்சி பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை தடுக்குமாறும் 3 கட்சிகளை சேர்ந்த தலைவர்களிடம் முதல்-மந்திரி கேட்டு கொண்டார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை: மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது;உத்தவ் தாக்கரே
ஜே.என்.யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
2. மராட்டியத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி: உத்தவ் தாக்ரே அதிரடி
மராட்டியத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
3. ”ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவு படுத்துகிறது” மாணவர்கள் மீதான தடியடி குறித்து உத்தவ் தாக்கரே கருத்து
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
4. பால்தாக்கரே நினைவுச்சின்னம் அமைக்க மரங்களை வெட்டக் கூடாது - உத்தவ் தாக்கரே உத்தரவு
பால்தாக்கரே நினைவுச்சின்னம் அமைக்க மரங்களை வெட்டக் கூடாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
5. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது: பாஜக சவால்
ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது.