உசைன் போல்ட்டின் சாதனையை முறியடிக்கும் வகையில் ஓடிய இந்திய வாலிபர்.. ஏன்...? எதற்காக...?


Credit: The news minute
x
Credit: The news minute
தினத்தந்தி 15 Feb 2020 9:22 AM GMT (Updated: 15 Feb 2020 9:22 AM GMT)

உலகின் அதிகவேக மின்னல் மனிதன் உசைன் போல்ட்டின் சாதனையையே முறியடிக்கும் அளவிற்கு ஓடியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்

மங்களூரு

கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் இந்த கம்பாலா  பந்தயம் பிரபலமானது.கஇந்த பந்தயங்களில், ஒரு ஜோடி எருமைகள் ஒரு கலப்பைடன் இணைக்கப்பட்டு இருக்கும் . சகதி நிரம்பிய வயல்களில்  ஓடுகின்றன, ஒரு விவசாயி அவற்றைக் பிந்தொடர்ந்து ஓடி கட்டுப்படுத்துவதே கம்பாலா  பந்தயம்.

மங்களூரு அருகே ஐகலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13. 62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா என்ற வாலிபர்.

இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9. 55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் என்பதே சீனிவாச கவுடாவை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கக் காரணம். 

உசைன் போல்ட் நன்றாக உள்ள தரையில் ஓடினார் என்றால் சீனிவாச கவுடாவோ ஓடுவதற்கு சிரமமான தண்ணீர் நிரப்பப்பட்ட மைதானத்தில் இப்படி மின்னல் வேகத்தில் ஓடி உள்ளார். தட்சினா கன்னடத்தில் உள்ள மிஜாரை சேர்ந்தவர் சீனிவாச கவுடா  பருவகாலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.  சீனிவாச கவுடா கடந்த 5 ஆண்டுகளாக கம்ப்ளா பந்தயத்தில் மாடுகளை விரட்டிக் கொண்டு ஓடி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். ஆனாலும், இந்த ஆண்டு 4 விதமான கம்பாலா பந்தயத்திலும் பரிசுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

சீனிவாச கவுடா தட்சிணா கன்னடத்தில் உள்ள கம்பாலா சுற்றுக்கு வெளியே அறியப்படவில்லைஇப்போது மாவட்டத்தின் ஐகலாவில் நடந்த கம்பாலா பந்தய நிகழ்வில் சாதனை படைத்ததன் பின்னர் புகழ் பெற்றார்.

இது குறித்து தெரிவித்துள்ள சீனிவாச கவுடா, ”"நான் இவ்வளவு வேகமாக ஓடுவேன் என்று  நினைக்கவில்லை. எருமைகள் விரைவாக ஓடின, நான் அவைகளைப் பின்தொடர்ந்தேன்," உசைன் போல்ட் அளவிற்கு நான் வேகமாக ஓடியது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மைதானத்தில் ஓடுகிறார். நான் சேறும் சகதியுமான பாதையில் எருமை மாடுகளுடன் ஓடுகிறேன். நானும் மைதானத்தில் ஓடினால், அவரை விட வேகமாக ஓடுவேன்” என்கிறார்.

விலங்கு உரிமைகள் தொடர்பாக பீட்டா   வலியுறுத்த்லை தொடர்ந்து  விளையாட்டு தடை செய்யப்பட்டது.  விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் (கர்நாடக திருத்த) கட்டளைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் இந்த் கம்பாலா  மீதான தடை நீக்கப்பட்டது. 

Next Story