மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 28 Feb 2020 11:31 AM GMT (Updated: 28 Feb 2020 11:31 AM GMT)

இந்தியாவில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இந்தியாவின் கோர் எஸ் டபிள்யூ மத்திய மண்டலம்  என அழைக்கப்படும்   வடமேற்கு, மேற்கு, மற்றும் மத்திய  மாநிலங்கள் தென்னிந்தியாவின் சில பகுதிகளை விட இயல்பை விட வெப்பமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கோடைகால கணிப்பில் கூறி உள்ளது

கோர் எஸ் டபிள்யூ மத்திய மண்டலம் என்பது பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா,தெலுங்கானா,  மராட்டியம் மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும் 

குறிப்பாக ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசத்தில் இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 0.37 டிகிரி செல்சியஸ் முதல் 0.41  செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த அளவிலேயே வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story