தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது + "||" + Congress senior leader Digvijay Singh arrested for visiting MLAs

எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது

எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது
எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இளம் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கட்சியில் இருந்து விலகினார். அவர்கள் அனைவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ரெசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா பா.ஜனதாவில் இணைந்தார்.


ரெசார்ட்டில் தங்கியுள்ள மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங், டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரசார் நேற்று ரெசார்ட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் திக்விஜய் சிங், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து திக்விஜய் சிங், டி.கே.சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பாவுடன் சந்திப்பு மந்திரிசபையில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை திடீரென்று சந்தித்து பேசினார்கள். மந்திரிசபை விரிவாக்கம், துறைகள் ஒதுக்குவது குறித்து எடியூரப்பாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
2. கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்
இலங்கையில் அதிகாரப்பகிர்வு குறித்து விவாதிக்க, கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
3. பரூக் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக் குழுவுக்கு அனுமதி
2 மாத வீட்டுச்சிறைக்குப் பின்னர் பரூக் அப்துலா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.