கொரோனா பாதிப்பால் சீக்கிய மத போதகர் பலி 15 கிராமங்கள் சீல் வைப்பு


கொரோனா பாதிப்பால் சீக்கிய மத போதகர் பலி 15 கிராமங்கள் சீல் வைப்பு
x
தினத்தந்தி 27 March 2020 12:34 PM GMT (Updated: 27 March 2020 12:34 PM GMT)

கொரோனா பாதிப்பால சீக்கிய மத போதகர் பலி 15கிராமங்களில் உள்ள 40 ஆயிரம் கிராம மக்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.


--சண்டிகார்

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து வட பஞ்சாபில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40,000 குடியிருப்பாளர்களை இந்திய அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். 70 வயதான முதியவர்  கொரோனா வைரஸால் இறந்தார் - இது அவரது மரணத்திற்குப் பிறகுதான் கண்டறியப்பட்டது.

பால்தேவ் சிங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அவர் இறப்பதற்கு சற்று முன்பு ஹோலா மொஹல்லாவின் சீக்கிய பண்டிகையை கொண்டாட ஒரு பெரிய கூட்டத்திற்கு சென்றிருந்தார்.ஆறு நாள் திருவிழா ஒவ்வொரு நாளும் 10,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு போதகரான அந்த நபர், இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கான பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் சுய தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனையை புறக்கணித்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

"இதுவரை, அவருடன் நேரடி தொடர்பு கொண்ட 550 பேரை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள 15 கிராமங்களை நாங்கள் சீல் வைத்துள்ளோம்" என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 640 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றில் 30 பஞ்சாபில் உள்ளன.

இருப்பினும், கொரோனா பாதிப்பு உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். உலகில் மிகக்குறைந்த சோதனை விகிதங்களில் இந்தியாவும் உள்ளது, இருப்பினும் சோதனை திறனை அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

Next Story