இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7529 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7529 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 April 2020 12:26 PM GMT (Updated: 11 April 2020 12:26 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,529 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை கதி கலங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.   

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.  

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,447-ல் இருந்து 7,529 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 653 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story