அசாம்:வெளியூரில் சிக்கியுள்ள மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 3 நாட்களுக்கு பேருந்து சேவை துவக்கம்


அசாம்:வெளியூரில் சிக்கியுள்ள மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 3 நாட்களுக்கு பேருந்து சேவை துவக்கம்
x
தினத்தந்தி 25 April 2020 4:30 PM GMT (Updated: 25 April 2020 4:30 PM GMT)

அசாமில் வெளி மாவட்டங்களில் சிக்கியுள்ள பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 நாட்கள் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால், சமூக இடைவெளியை பின்பற்ற உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்து முடக்கத்தால்,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அசாம் மாநிலத்தில் நகரங்களில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க  3 நாட்கள் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு பேருந்து போக்குவரத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. 

முதல் நாளான இன்று மட்டும் 17 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.  50 சதவீத அளவு பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டது. சொந்த வாகனங்களில், செல்வதற்கும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story