மும்பையில் 55-வயதிற்கு மேற்பட்ட காவலர்களுக்கு விடுப்பு; மும்பை காவல்துறை நடவடிக்கை


Representative image
x
Representative image
தினத்தந்தி 28 April 2020 9:42 AM GMT (Updated: 28 April 2020 9:42 AM GMT)

மும்பையில் 55-வயதிற்கு மேற்பட்ட காவலர்களுக்கு விடுப்பு அளித்து மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாநிலமாக மராட்டியம் திகழ்கிறது.  மராட்டியத்தில் 8590 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.  குறிப்பாக மராட்டிய  தலைநகர் மும்பையில் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.  

கடந்த 3 நாட்களில் மட்டும் 3 போலீஸார் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.  இதையடுத்து,  55- வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தோம். 3 போலீஸார் அடுத்தடுத்து கொரோனாவில் உயிரிழந்தனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

 இவர்கள் அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். எனவே,  இதைக் கருத்தில் கொண்டு போலீஸாரையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டி 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்ரீதியாக நோயால் பாதிக்கப்பட்டவர்களை விடுப்பு எடுத்துச் சென்று வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.  

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் மீள்வது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  விடுப்பில் செல்லும் போலீஸாரின் ஊதியம் ஏதும் பிடிக்கப்படாது” என்றார்.  

மராட்டிய  மாநிலத்தில் மொத்தம் 20 அதிகாரிகள் உள்பட 107 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story