சோதனை அடிப்படையிலேயே கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை: மத்திய அரசு


சோதனை அடிப்படையிலேயே கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை: மத்திய அரசு
x
தினத்தந்தி 28 April 2020 12:20 PM GMT (Updated: 28 April 2020 12:20 PM GMT)

சோதனை அடிப்படையிலேயே கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன்களை அளிப்பதாக டெல்லி அரசு சமீபத்தில் கூறியிருந்தது.  இந்த நிலையில்,சோதனை முயற்சியாக பிளாஸ்மா  முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை, கொரோனா பாதிப்பில் இருந்து மீள பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. 

 பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணம் அடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மா மூலக்கூறுகள் பெறப்பட்டு, அவை அதிகம் கொரோனா அதிகம் பாதித்தோரின் இரத்தத்தில் செலுத்தப்படும். குணம் அடைந்தவர்களின் இரத்தத்தில் தொற்றை எதிர்க்கும் சக்தி இருக்கும். இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா செலுத்தும்போது, அவர்கள் குணம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.  சார்ஸ், எபோலா, எச் 1என்1 ஆகிய நோய்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளித்தது. 


Next Story