தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Maharashtra reports record single-day spike with 1,233 new coronavirus cases

மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புனே,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் இன்று புதிதாக 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,758 ஆக உயர்ந்துள்ளதாகவும் அம்மாநில மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் வைரஸ் தொற்றுக்கு இன்று 34 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை அங்கு 1,90,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்ட கொரோனா பட்டியலில் மேலும் 2 பேர் சேர்ப்பு
ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் ஆவர்.
2. கொரோனா பாதிப்பால்தான் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்: டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
4. சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல-டாக்டர்கள்
சாதாரணமாக ஏற்படும் அனைத்து இருமல், தும்மலும் கொரோனா அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
5. ‘கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர்’ - ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று வீரர் வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.