தேசிய செய்திகள்

நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை - அமித் ஷா விளக்கம் + "||" + "I want to make it clear that I am completely healthy and do not suffer from any disease," the Home Minister

நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை - அமித் ஷா விளக்கம்

நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை - அமித் ஷா விளக்கம்
எனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
புதுடெல்லி,

நல்ல உடல் நலத்துடன் தான் இருப்பதாகவும், எனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.  அமித்ஷாவின் உடல் நலம் குறித்து  கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில்  வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில், அமித்ஷா டுவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார். 

அமித்ஷா தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-  உலக பெருந்தொற்றான கொரோனாவுக்கு எதிராக நமது நாடு போராடி வருகிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதால், நானும் மிகவும் பரபரப்பாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.  இது (வதந்திகள்) போன்றவைகளுக்கு நான் கவனம் கொடுப்பதில்லை.  நேற்று இரவு எனது கவனத்திற்கு இவை வந்த போது, வதந்தி பரப்புவர்கள் அனைவரும் தங்களின் கற்பனை சிந்தனைகளால் மகிழ்ச்சியில் இருக்கட்டும் என்று நான் கருதினேன். எனவே, நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

ஆனால், கடந்த இரு தினங்களாக எனது  கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர்.  அவர்களின் வருத்தத்தை என்னால் புறக்கணிக்க முடியாது. எனவே, நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆயிரம்படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டெல்லி தற்காலிக ஆஸ்பத்திரியில் அமித்ஷா ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது.
2. ராகுல் காந்தியை கடுமையாக சாடும் ராணுவ வீரரின் தந்தை - டுவிட்டரில் பகிர்ந்த அமித்ஷா
லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
3. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் - அமித்ஷா
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
4. அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று டாக்டர்கள் போராட்டம் வாபஸ்
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று, டாக்டர்கள் தங்கள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
5. என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா
என்.பி.ஆர்.குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாநிலங்களவையில், டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.