‘சிங்கம்’ படப்பாணியில் சாகசம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மத்தியபிரதேசத்தில் ‘சிங்கம்’ படப்பாணியில் சாகசம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் டாமோ மாவட்டம் நரசிங்கார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் மனோஜ் யாதவ். இவர், ‘சிங்கம்’ இந்திப்படத்தில், நடிகர் அஜய் தேவ்கன், 2 ஓடும் கார்களில் ஒரே நேரத்தில் நின்றபடி சாகசம் செய்வதைப் போல், தானும் செய்து அதை வீடியோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
அந்த வீடியோ வேகமாக பரவியது. இது, இளைஞர்களுக்கு தவறான எண்ணஓட்டத்தை வளர்க்கும் என்பதால், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு டாமோ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்த் சவுகனுக்கு போலீஸ் ஐ.ஜி. உத்தரவிட்டார்.
அதன்படி விசாரித்த ஹேமந்த் சவுகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் யாதவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மறுபடியும் இதுபோல் செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார்.
Related Tags :
Next Story