ஆந்திர மாநிலத்தில் உள் மாநில பேருந்து போக்குவரத்து துவக்கம் - சமூக இடைவெளியுடன் பயணித்த பயணிகள்


ஆந்திர மாநிலத்தில் உள் மாநில பேருந்து போக்குவரத்து துவக்கம் - சமூக இடைவெளியுடன் பயணித்த பயணிகள்
x
தினத்தந்தி 21 May 2020 1:28 PM IST (Updated: 21 May 2020 1:28 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் உள்மாவட்ட போக்குவரத்து தொடங்கியது. சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணம் செய்தனர்.

ஐதராபாத்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,557 ஆக உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அளித்தது. இந்த ஊரடங்கின் சில தளர்வுகளுடன் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு, பல்வேறு மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 58 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை 7 மணி முதல் உள்மாவட்ட போக்குவரத்து தொடங்கியது. 

மாநிலத்தின் 436 வழித்தடங்களில் ஆயிரத்து 683 பேருந்து இயக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 12 ஆயிரம்  பேருந்துகள் உள்ள நிலையில் தற்பொழுது 17 சதவிகிதம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

 பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு சமூக இடைவெளியுடன் பேருந்தில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். ஒரு பேருந்திற்கு 20 முதல் 30 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Next Story