தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன் + "||" + Kerala reports 67 new COVID-19 cases on Tuesday

கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து  திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அம்மாநிலத்தில், இன்று ஒரே நாளில் கேரளாவில் 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 27 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள். 15 பேர் மராட்டியத்தில் இருந்தும் 9 பேர்  தமிழகத்தில் இருந்தும், 5 பேர் குஜராத்தில் இருந்தும்  வந்தவர்கள் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில், இன்று அம்மாநிலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெற்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதித்த சென்னை ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.
2. ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் தப்பிய 106 வயது முதியவர்
டெல்லியில் 106 வயது நிறைந்த முதியவர் ஒருவர் ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் விடுபட்டு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளார்.
3. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்ந்துள்ளது.
5. அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.