இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது நிதின் கட்காரி கருத்து


இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது நிதின் கட்காரி கருத்து
x
தினத்தந்தி 12 Jun 2020 12:26 AM GMT (Updated: 2020-06-12T05:56:42+05:30)

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

புதுடெல்லி,

எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சில் ஏற்பாடு செய்த ஆன்லைன் உரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வது தொடர்பான ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவை இதயம் போன்றவை. இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய புதிய சமூக உடன்பாட்டை உருவாக்க வேண்டியது அவசியம்.

குறிப்பிட்ட மாவட்டங்களில், வேளாண்மை, ஊரக, பழங்குடியின பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இது, கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், பெருநகரங்களில் மக்கள் நெரிசலை குறைக்கும். ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் கிராமங்கள் மூலம் புதிய பொருளாதார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.எரிசக்தி பாதுகாப்பை உருவாக்கி, இறக்குமதியை குறைப்பதற்காக எத்தனால், மெத்தனால், மின்சார வாகனங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story