மிசோரமில் திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி


மிசோரமில் திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி
x
தினத்தந்தி 22 Jun 2020 2:24 PM IST (Updated: 22 Jun 2020 2:24 PM IST)
t-max-icont-min-icon

மிசோரமில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.

அய்சாவல்,

மிசோரமின் அய்சாவல் நகரில் லிமென் சாம்டிலேங் சாலையில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில், குவாரி அமைந்திருந்த பகுதியில் திடீரென பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்து உள்ளார்.  மிசோரம் மாநிலத்தின் அய்சாவல் நகரின் வடகிழக்கே 25 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 4.16 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு இந்தியா தவிர்த்து, வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.  இந்த நிலையில், அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

Next Story