லடாக் எல்லையில் நிலைமையை மாற்ற முயற்சிப்பது சரியான வழி அல்ல விளைவுகளை ஏற்படுத்தும் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை


லடாக் எல்லையில் நிலைமையை மாற்ற முயற்சிப்பது சரியான வழி அல்ல விளைவுகளை ஏற்படுத்தும் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2020 5:57 AM GMT (Updated: 27 Jun 2020 5:57 AM GMT)

லடாக் எல்லையில் நிலைமையை மாற்ற முயற்சிப்பது சரியான வழி அல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி

சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:-

கிழக்கு எல்லையில் தற்போதைய சிக்கலை தீர்ப்பதற்கான ஒரே வழி சீனா வலுக்கட்டாயமாக அல்லது வற்புறுத்தலுக்கு ஆளாகி நிலைமையை மாற்ற முயற்சிப்பது சரியான வழி அல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

இந்திய துருப்புக்களின் சாதாரண ரோந்து முறைகளில் சீனத் தரப்பு  தடைகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு தங்கள் பகுதி என  கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வகையான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள் நிலைமைக்கு உதவப் போவதில்லை.

இந்தியா கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பகுதியை சீரமைப்பது குறித்து மிகவும் விழிப்புடன், மிகத் தெளிவாக உள்ளது. மிக நீண்ட காலமாக ராணுவம்  எந்தவித சிரமமும் இன்றி இந்த பகுதிகளுக்கு ரோந்து சென்று வந்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பராமரிப்பது இருதரப்பு உறவின் மீதமுள்ள முன்னேற்றத்திற்கு முக்கியம் என்ற தீர்மானத்திற்கு எதிராக இந்திய துருப்புக்கள் ரோந்து செல்ல சீன தரப்பு தடைகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். நீண்ட கால சீன நடவடிக்கைகளே தற்போதைய நிலைமைக்கு காரணமாகின்றன என கூறினார்.


Next Story