தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + India records biggest single-day spike of 19,906 cases

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் மிக அதிக அளவாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை தகவல்படி, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 16,095 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் 19,906 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 5,28,859 ஆகும், இதில் 2,03,051 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3,09,713 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை  16,095 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதில், 2 லட்சத்து 31 ஆயிரத்து 095 பரிசோதனைகள் நேற்று மட்டும் நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்: 

மராட்டிய மாநிலத்தில் பாதிப்பு - 1,59,133 பேர், உயிரிழப்பு - 7,273 பேர், 
தலைநகர் டெல்லியில் பாதிப்பு - 80,188 பேர், உயிரிழப்பு - 2,558 பேர், 
தமிழகத்தில் பாதிப்பு - 78,335 பேர், உயிரிழப்பு - 1,025 பேர், 
குஜராத் மாநிலத்தில் பாதிப்பு - 30,709 பேர், உயிரிழப்பு - 1,789 பேர், 
உத்திரபிரதேச மாநிலத்தில் பாதிப்பு - 21,549 பேர், உயிரிழப்பு - 649 பேர், 
ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிப்பு - 16,944 பேர், உயிரிழப்பு - 391 பேர், 
மேற்கு வங்க மாநிலத்தில் பாதிப்பு - 16,711 பேர், உயிரிழப்பு - 629 பேர், 
தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு - 13,436 பேர், உயிரிழப்பு - 243 பேர், 
மத்திய பிரதேச மாநிலத்தில் பாதிப்பு - 12,965 பேர், உயிரிழப்பு - 550 பேர், 
ஆந்திர மாநிலத்தில் பாதிப்பு - 12,285பேர், உயிரிழப்பு - 157 பேர், 
கர்நாடக மாநிலத்தில் பாதிப்பு - 11,923 பேர், உயிரிழப்பு - 191 பேர், 
பீகார் மாநிலத்தில் பாதிப்பு - 8,931 பேர், உயிரிழப்பு - 59 பேர், 
காஷ்மீர் மாநிலத்தில் பாதிப்பு - 6966 பேர், உயிரிழப்பு - 93 பேர், 
அசாம் மாநிலத்தில் பாதிப்பு - 6,816 பேர், உயிரிழப்பு - 9 பேர், 
ஒடிசா மாநிலத்தில் பாதிப்பு - 6,350 பேர், உயிரிழப்பு - 18 பேர், 
பஞ்சாப் மாநிலத்தில் பாதிப்பு - 5,056 பேர், உயிரிழப்பு - 128 பேர், 
கேரள மாநிலத்தில் பாதிப்பு - 4,071 பேர், உயிரிழப்பு - 22 பேர், 
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாதிப்பு - 2,791 பேர், உயிரிழப்பு - 37 பேர், 
சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதிப்பு - 2,545  பேர், உயிரிழப்பு - 13 பேர், 
ஜார்கண்ட் மாநிலத்தில் பாதிப்பு - 2,339 பேர், உயிரிழப்பு - 12 பேர், 
திரிபுரா மாநிலத்தில் பாதிப்பு - 334 பேர், உயிரிழப்பு - 1 பேர், 
கோவா மாநிலத்தில் பாதிப்பு - 128 பேர், உயிரிழப்பு - 2 பேர், 
மணிப்பூர் மாநிலத்தில் பாதிப்பு - 92 பேர், உயிரிழப்பு - இல்லை.


தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்குகிறது சிபிஐ
இந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று இன்று விசாரணையை தொடங்குகிறது
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்
பதற்றம் தணிந்த பிறகு லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
4. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.