கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 Jun 2020 1:48 PM GMT (Updated: 30 Jun 2020 1:48 PM GMT)

கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.  இதையடுத்து வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் இன்று புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.

இன்றை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 111 பேர் உட்பட 131 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 75 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,304 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் தொடர்ந்து 12-வது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story