சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு


சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2020 10:15 AM IST (Updated: 3 July 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

லே,

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த மோதலையடுத்து இரு நாடுகளிடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இந்த நிலையில், லடக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். ராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தார். பிரதமர் மோடியுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்தார்.

எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story