விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் - பிரதமர் மோடி


விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 13 July 2020 9:47 AM GMT (Updated: 13 July 2020 9:47 AM GMT)

விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
 
இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

இன்று காலை, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள்,தகவல் பாதுகாப்பு குறுத்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன்.

குறிப்பாக இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.


Next Story