எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் + "||" + Pakistan initiated an Unprovoked Ceasefire Violation (CFV) today afternoon along the LoC
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்க தவறுவதில்லை. இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் உரி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறீ தாக்குதல் நடத்தியது. மோர்டார்கள் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் ராணுவ போர்டர் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் பின்னர் உயிரிழந்தார். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தகவலை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.