ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது - அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு


ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது - அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 July 2020 9:21 AM GMT (Updated: 30 July 2020 9:21 AM GMT)

லக்னோவில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலைய்லி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர பிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, 9 மூத்த காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் பூமி பூஜை நடைபெறும் நாள் அன்று, அரசியல் சாசனம் 370 - வது பிரிவு நீக்கப்பட்ட முதல் ஆண்டு தினம் வருவதாலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் வருவதையும் ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகள் நடைபெற்று வருவதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

Next Story