தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம் + "||" + Ayodhya illuminated by colored lights in honor of Ram Temple Bhoomi Puja

ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்

ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்
அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
அயோத்தி,

அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.


இந்த பூமி பூஜை நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாளை அயோத்தி செல்கிறார். நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பூமி பூஜை நடைபெறு தினத்தன்று விளக்கேற்றுவதற்காக சுமார் 1.25 லட்சம் விளக்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக உத்தர பிரதேச மாநில வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

அயோத்தியின் முக்கிய சாலைகள், கோவில்கள், புனித தளங்கள் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் வண்ணமயமான விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து அயோத்தியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்ததை தொடர்ந்து அயோத்தியில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும், சரயு நதியில் நீராடியும் குதூகலித்தனர்.
2. ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் சிவசேனா நம்பிக்கை
ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா கூறியுள்ளது.
3. ராமர் கோவிலுக்கு பூமி பூஜை: அயோத்தியில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை
அயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதலும் நடக்கிறது.
4. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார்.
5. முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் ராமர் கோவில்
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.