இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை + "||" + Suspected Pakistani intruder shot dead by BSF on International Border near Gujarat, Rajasthan
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையையொட்டிய பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
ராஜஸ்தானின் பாா்மா் மாவட்டத்தில் எல்லையை ஒட்டிய பகாசா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் ரோந்து சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒரு நபா் சா்வதேச எல்லையை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றதை கண்ட பாதுகாப்புப் படையினா் அவரை எச்சரித்தனா். அவா் அதையும் மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றதையடுத்து பாதுகாப்புப் படையினா் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனா். எனினும் அவா் அப்பகுதியில் இருந்த புதரில் மறைந்துகொண்டாா். அந்தப் பகுதியில் தேடியபோது அந்த நபா் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.
இறந்த நபரின் அடையாளத்தை கண்டறியுமாறு பாகிஸ்தான் படையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் முதல் முறையாக அதிகாலை நேரத்தில் ஊடுருவ முயற்சி நடந்துள்ளது” இவ்வாறு தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.