தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா + "||" + List of Thanksgiving by actor Sushant Singh - Actress Riya posted on social media

நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா

நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா
நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை சி.பி.ஐ. தன் வசம் எடுத்து உள்ளது. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரியாவிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.


இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகை ரியா, சுஷாந்த் கைப்பட எழுதியது என கூறி டைரியின் பக்கம் ஒன்றை அவரது வக்கீல் மூலமாக சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நன்றிகடன் பட்டவர்கள் என்ற தலைப்பில் உள்ள அந்த பக்கத்தில், "நான் என் வாழ்க்கைக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். எனது வாழ்வில் லில்லுவுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் பெபுவுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் சாருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். என் வாழ்வில் மேடமுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் புட்ஜிக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன் " என கூறப்பட்டுள்ளது.

இதில் பெபு என்று குறிப்பிட்டு இருப்பது ரியா எனவும், லில்லு ரியாவின் சகோதர் சோவிக் எனவும், சார் என்பது ரியாவின் தந்தை எனவும், மேடம் அவரின் தாய் எனவும், புட்ஜ் நாய் குட்டி எனவும் ரியா தெரிவித்து உள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் ஒன்றின் படத்தை வெளியிட்டுள்ள ரியா அதுதான் தன்னிடம் உள்ள சுஷாந்த் சிங்கின் சொத்து எனவும் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் சி.பி.ஐ. மீண்டும் ஆய்வு
சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
2. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்: போதைப்பொருள் வியாபாரி கைது - 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
நடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
3. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: என்னை பயங்கரவாதி போல நடத்துகிறார்கள்- நடிகை ரியா சக்ரபோர்த்தி
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், தன்னை பயங்கரவாதி போல நடத்துவதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
4. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை - வக்கீல் தகவல்
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.
5. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.