மும்பையில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


மும்பையில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2020 2:30 AM GMT (Updated: 10 Aug 2020 2:30 AM GMT)

மும்பையில் இன்று தொடங்கி இன்னும் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை,

மும்பையில் 46 ஆண்டுகள் கழித்து கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் போக்குவரத்து வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று முதல் இன்னும் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் ஹோசிலியர் கூறியதாவது;-

“வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் பெய்யும் மழையின் அளவு 58.52 செ. மீ தான் இருக்கும். ஆனால் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை மும்பையில் 59.76 செ. மீ மழை பெய்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்கி ஒரு வார காலத்திற்கு மும்மை மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story