கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 10 Aug 2020 10:55 AM GMT (Updated: 10 Aug 2020 10:55 AM GMT)

கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு,

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து வந்திறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.  காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு நேற்று கெரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story