ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது: ராஜ்நாத்சிங் கண்டிப்பு


ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது: ராஜ்நாத்சிங் கண்டிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 1:04 PM IST (Updated: 5 Sept 2020 1:04 PM IST)
t-max-icont-min-icon

லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது.

மாஸ்கோ,

இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.  பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை ராஜ்நாத்சிங் சந்தித்தார். லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடம் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  
இந்த சந்திப்பின் போது சீன பாதுகாப்புத்தூறை அமைச்சரிடம் ராஜ்நாத்சிங், ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் எல்லை நிர்வாகத்தில் இந்தியப் படை எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையைக் கையாள்வதாகவும், நாட்டின் எல்லை மற்றும் இறையாண்மையையும் இந்திய ராணுவம் உறுதியுடன் காக்கும் என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச எல்லையில் சீனா திடீரென அதிகப்படியான படைகளைக் குவிப்பதோ, இந்திய எல்லைக்குள் நுழைய அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபடுவதோ, இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறுவதாகும் என்றும் ராஜ்நாத் சிங் காட்டமாகக் கூறியுள்ளார்.


Next Story