சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு


சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
x
தினத்தந்தி 15 Sept 2020 12:52 PM IST (Updated: 15 Sept 2020 12:52 PM IST)
t-max-icont-min-icon

சீனாவை வீழ்த்தி ஐநா சபையின் ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையகத்தின் உறுப்பினராக, இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

ஐக்கியநாடுகள்

54 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த அமைப்பிற்கான ஆணைய தேர்தலில்,  இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை போட்டியிட்ட நிலையில், பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்த உறுப்பினர் திருமூர்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த வெற்றியானது பாலின சமத்துவத்தையும், பெண்களுக்கான அதிகாரமளிப்பையும் மேம்படுத்துவதற்காக, இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு கிடைத்துள்ள ஒப்புதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story