அதிவேக தகவல் தொடர்புக்காக லடாக் பிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் பைபர் கேபிள் அமைக்கும் சீனா


அதிவேக தகவல் தொடர்புக்காக லடாக் பிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் பைபர் கேபிள் அமைக்கும் சீனா
x
தினத்தந்தி 15 Sep 2020 8:14 AM GMT (Updated: 15 Sep 2020 8:14 AM GMT)

அதிவேக தகவல்தொடர்புக்காக சீனா லடாக் பிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் பைபர் கேபிள்களின் வலையமைப்பை அமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி: 

அசல் கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றங்களை அதிகரிக்க இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், சீனா ராணுவம் அதிவேக தகவல்தொடர்புக்காக லடாக் பிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் பைபர் கேபிள்களின் வலையமைப்பை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

சீனப் படையினருக்கு பாதுகாப்பான தகவல்தொடர்புகளை வழங்கும் கேபிள்கள் லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் தெற்கே காணப்பட்டது. அவர்கள் தெற்கு கரையில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை அதிவேகத்தில் அமைத்து வருகிறார்கள்.

பாங்காங் த்சோ ஏரியின் தெற்கே 70 கி.மீ நீளமுள்ள முன்புறத்தில் இந்திய மற்றும் சீன ராணுவம் 3 மாத காலமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன .இராணுவ மற்றும் தூதரக மட்டங்களில் இரு தரப்பினரும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர், ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஆப்டிகல் பைபர் கேபிள்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பையும் படங்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற தரவை அனுப்பும் திறனையும் வழங்குகின்றன என்று முன்னாள் இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீங்கள் வானொலியில் பேசினால், அது சிக்கிக் கொள்ளலாம். ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களில் தொடர்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Next Story