2 நாள் ஏற்றத்திற்கு பின் சென்செக்ஸ் 323 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 85 புள்ளிகளை இழந்தது


2 நாள் ஏற்றத்திற்கு பின் சென்செக்ஸ் 323 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 85 புள்ளிகளை இழந்தது
x
தினத்தந்தி 17 Sep 2020 7:00 PM GMT (Updated: 17 Sep 2020 6:54 PM GMT)

2 நாள் ஏற்றத்திற்கு பின் சென்செக்ஸ் 323 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 85 புள்ளிகளை இழந்தது

மும்பை,

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.87 சதவீதம் இறங்கியது. அடுத்து உலோகத்துறை குறியீட்டு எண் 1.27 சதவீதம் குறைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 27 பங்குகளின் விலை சரிந்தது. 3 பங்குகளின் விலை அதிகரித்தது.

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 323 புள்ளிகளை இழந்து 38,979.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,234.81 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,926.34 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்த சந்தையில் 1,574 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 1,153 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. 169 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,820 கோடியாக குறைந்தது. கடந்த புதன்கிழமை அன்று அது ரூ.3,130 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 85.30 புள்ளிகள் இறங்கி 11,519.25 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,587.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,498.50 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story