மராட்டியத்தில் இன்று மேலும் 10,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Maharashtra reports 10,552 new COVID19 cases, 19,517 discharged cases & 158 deaths, State Health Department
மராட்டியத்தில் இன்று மேலும் 10,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 10,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,54,389 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 158 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,859 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 19,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,16,769 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 1,96,288 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.