தேசிய செய்திகள்

புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி: நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம் + "||" + Statistical mess: NEET exam results removed from the website

புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி: நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்

புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி: நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்
புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய விவரம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் நேற்று தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மாநில வாரியாக புள்ளிவிவரப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 37,301 பேர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் பட்டியல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தவறுகளை திருத்தம் செய்து புதிய முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.