எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
ஸ்ரீநகர்,
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.நேற்றுமுன்தினம் இரவு அந்நாட்டு ராணுவத்தினர் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் குடியிருப்புகளை குறித்து வைத்து தாக்குதலை நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையிலான இந்த சண்டை நேற்று அதிகாலை 5 மணி வரையிலும் நீடித்தது.
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டில் கடந்த 6-ந்தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் 3 ஆயிரத்து 589 முறை அத்துமீறி தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story