பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ள கோடீஸ்வர வேட்பாளர்கள் 375 பேர்


பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ள கோடீஸ்வர வேட்பாளர்கள் 375 பேர்
x
தினத்தந்தி 23 Oct 2020 4:39 PM GMT (Updated: 23 Oct 2020 4:39 PM GMT)

வறுமை கோட்டிற்கு கீழ் 33.74 சதவீதம் பேர் வாழும் பீகாரில் கோடீஸ்வர வேட்பாளர்கள் 375 பேர் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

பாட்னா,

நாட்டின் 3வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட பீகாரில் 33.74 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். இந்நிலையில் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை தேர்தலிலுக்கான பிரச்சாரம் தற்போது களைகட்டியுள்ளது.

முதல் கட்டமாக 71 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 28ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1,066 வேட்பாளர்கள் போட்டியிடும் முதல் கட்ட தேர்தலில், 375 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உடைய கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 35 பேரில் 31 பேர் தலா 8 கோடிக்கும் மேல் சொத்து உள்ளவர்கள் ஆவர். பாஜகவின் 29 வேட்பாளர்களில் 24 பேர் தலா 3 கோடி ரூபாய்க்கு மேல் தொத்து உள்ளவர்கள். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 42 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் தலா 6 கோடியை கடந்துள்ளது.

Next Story