தேசிய செய்திகள்

காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி + "||" + Not a word from the tweet-friendly leader Shri Rahul Gandhi.

காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி

காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ பீகாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளியின் 6-வயது மகள் ஹோசியார்பூரில்(பஞ்சாப்) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. 

அரசியல் ரீதியாக தங்களுக்கு உதவும் வகையில்   பிற இடங்களுக்கு எல்லாம் செல்லும் சகோதரர் மற்றும் சகோதரியின் மனசாட்சியை இந்த சம்பவம் உலுக்கவில்லையா?  ராகுல் காந்தியிடம் இருந்து எந்த ஒரு டுவிட் பதிவும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் எந்த கொந்தளிப்பும் ஏற்படவில்லை. எந்த சுற்றுப்பயணமும் இல்லை.  எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது. தங்கள் ஆளும் மாநிலங்களில்  வன்கொடுமை நடந்தால் காங்கிரஸ் மவுனம் காக்கிறது’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க அழகிரி பரபரப்பு பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று மு.க அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
2. பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது: ராகுல் காந்தி
பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. வகுப்புவாத அரசியல் ஐதராபாத்தில் பலிக்காது: அசாதுதின் ஓவைசி சொல்கிறார்
ஐதராபாத்தில் வகுப்புவாத அரசியல் பலிக்காது என்று அசாதுதின் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.
4. இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
5. வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டனர் - உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்
வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.