முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும்- பிரதமர் மோடி டுவிட்
பீகாரில் சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில், அனைவரும் பங்கேற்று ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story