எஸ்சிஓ கவுன்சில் தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி உரை
எஸ்சிஓ கவுன்சில் தலைவர்களின் 20-வது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
புதுடெல்லி,
எஸ்சிஓ கவுன்சில் தலைவர்களின் 20-வது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். 9 நிமிட உரையின் போது, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை பிரதமர் எடுத்துரைத்தார்.
அந்த மாநாட்டில் பேசிய அவர், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் இந்தியா வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இணைப்பை மேம்படுத்துவதற்கு ஒருவருக்கொருவர் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கும்போது நாம் முன்னேற வேண்டியது அவசியம் என்று இந்தியா நம்புகிறது.
இந்தியா, அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றை கடுமையாக நம்புகிறது, பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் மற்றும் பணமோசடி ஆகியவற்றிற்கு நாங்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். எஸ்சிஓ சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்படி எஸ்சிஓவின் கீழ் பணியாற்றுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது.
எஸ்சிஓ கவுன்சில் தலைவர்களின் மாநாட்டில், எஸ்சிஓ சாசனத்தையும், ஷாங்காய் மனப்பான்மையையும் மீறும் வகையில் இருதரப்பு பிரச்சினைகளை கொண்டுவருவதற்கு தேவையற்ற முயற்சிகள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story